IVF சிகிச்சை, செங்கல்பட்டில் முதல்முறையாக
அன்புள்ள வாசகர்களுக்கு,
புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்கள் நிகழ்ந்துகொண்டிருந்த கடந்த மாதத்தில், சர்க்கரை நோயின் தீவிரத்தை தடுக்கும் யுக்திகளை விவாதிக்கும் கருத்தரங்குகள் இரண்டில் பங்கேற்கும் வாய்ப்பும் கிட்டியது. திண்டுக்கல் சர்க்கரை நோய் சங்கத்தின் (Diabetes Club of Dindigul)மூன்றாம் ஆண்டு கருத்தரங்கு மற்றும் டைசிகான் (Diabetes Association of India Conference - DAISICON) கருத்தரங்குகளில் மருத்துவர் K.P.பிச்சுமணி அவர்கள் குடல்வாய் கோளாறுகள் உள்ளிட்டு சர்க்கரை நோயாளிகளுக்கான நவீன சிகிச்சை முறைகளை தெரிவித்தார்.
கடந்த பத்து ஆண்டுகளாக செயற்கை கருவூட்டு முறையான Intra Uterine Insemination - IUI மூலம் பல தம்பதியர் நம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பெருமிதத்துடன் பெற்றோராக வீடு திரும்பியுள்ளனர். இந்நுட்பத்தின் அடுத்த நிலையான டெஸ்ட் டியூப் பேபி (Test tube baby)என பரவலாக அழைக்கப்படும் (In Vitro Fertilisation - IVF) முறை செங்கல்பட்டில் முதல்முறையாக நமது மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
மூட்டு வலி, பக்கவாதம், இரத்த கொதிப்பு, இருதய கோளாறு, உடல் எடை குறைபாடு போன்ற பல நிலைகளுக்கு சிகிச்சை பெரும் நபர்களுக்கு American College of Sports Medicine (ACSM), American Fitness Professional Associates (AFPA) போன்ற முதல் தர நிறுவனங்களில் தேர்ந்த பிசியோதெரபிஸ்ட்களால் சிறப்பான பயிற்சிகளை அளித்துவரும் ஸ்ரீ ரெங்கா பெயின் அண்ட் ரீஹாப் சென்டர் பவர்டு பை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிசியோதெரபி சென்டர் வெற்றிகரமாக மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
மேலும் பல செய்திகள் இதழ் உள்ளே இருக்க, உங்கள் கேள்விகளையும், கருத்துகளையும் தொடர்ந்து எங்களுக்கு எழுதுங்கள். மீண்டும் சந்திக்கும் வரை,
டாக்டர் அனுராதா பிச்சுமணி MBBS DGO FICOG MBA
e-mail: nabhsrh@gmail.com
அன்புள்ள வாசகர்களுக்கு ...
அன்புள்ள வாசகர்களுக்கு,
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
கடந்த டிசம்பர் மாதம் உலக சர்க்கரை நோய் குழுமம் ( World Congress of Diabetes; ) கனடா (Canada) நாட்டில் கூட்டிய சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்பதற்காக நாங்கள் சென்றிருந்த சமயம் எவரும் எதிர்பாராத மழை, வெள்ளம் தமிழ்நாட்டை தாக்கியது. சர்க்கரை நோய்க்கான நவீன சிகிச்சை முறைகளை அறிந்ததோடு, இயற்கையின் சீற்றம் ஏற்படுத்திய துயரங்களையும் தொலைவிலிருந்து கண்டோம். பாதிக்கப்பட்டோருக்கு உதவ பல இடங்களில் நமது மருத்துவமனை இலவச முகாம்களை நடத்திவருகிறது. இதிலிருந்து மீண்டு அடியெடுத்து வைக்கும் இப்புத்தாண்டில் அனைவரும் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் பெற எங்கள் வாழ்த்துக்கள்.
காய்ச்சல் தானே என கவனக்குறைவாக இருக்கும் சர்க்கரை நோயாளிகளின் கண்களை இம்மாத சிறப்பு கட்டுரை திறந்து வைக்கும் என நம்புகிறோம்; தவறாமல் படியுங்கள்.
மருந்து மாத்திரைகளுக்கு இணையாக சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது முறையான யோகாசன பயிற்சிகள். இவ்வரிசையில், பச்சிமோத்தாசனம் பற்றிய அறிமுகம் உள்ளே..
மேலும் பல செய்திகள் இதழ் உள்ளே இருக்க, உங்கள் கேள்விகளையும், கருத்துகளையும் தொடர்ந்து எங்களுக்கு எழுதுங்கள்.
எங்கள் மருத்துவமனையின் சார்பாக, அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
மீண்டும் சந்திக்கும் வரை,
டாக்டர் அனுராதா பிச்சுமணி MBBS DGO FICOG MBA
e-mail: nabhsrh@gmail.com
Dr.K.P.Pichumani MD at the Third Annual Conference of the Diabetes Club of Dindigul